districts

img

சமத்துவபுரம் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா : ஆட்சியருக்கு சிபிஎம் கோரிக்கை

ராணிப்பேட்டை, ஜூன் 3 - ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியம், கூடலூர் ஊராட்சியில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வீட்டுமனை பட்டா வழங்க ரூ.2500 லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 100 வீடுகளில் இந்த பிரச்சனை உள்ள தாக பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியிடம் புகார் அளித்தனர். இது குறித்து சிபிஎம் அரக்கோணம் தாலுகா குழு செயலாளர் எபிஎம். சீனிவாசன் தலைமையில் திங்களன்று (ஜூன் 3)  மக்களிடம் கலந்தாய்வுக் கூட்டம் நடை பெற்றது. இதில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பி னர் பி. ரகுபதி, அரக்கோணம் தாலுகா குழு உறுப்பினர் தென்னரசு,  பாராஞ்சி பிரசாத், கூடலூர் அப்பு, பரவத்தூர் சரத் ஆகி யோர் உடன் இருந்தனர். இக்கூட்டத்தில் சமத்துவபுரம் மக்களை ஒன்றிணைத்து வட்டாட்சியரிடம்  கோரிக்கை மனு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.