districts

img

கல்லூரி மாணவர்களுக்கு இலவச புத்தகம் ராஜஸ்தான் இளைஞர்கள் சங்கம் உதவி

சென்னை, ஜூலை 16-

    தமிழ்நாட்டை சேர்ந்த கல்லூரி மாண வர்களுக்கு ராஜஸ்தான் இளைஞர்கள் சங்கத்தினர் இலவச புத்தகங்களை வழங்கி உதவியுள்ளனர். 60 ஆண்டுகளாக வழங்கி வரும் இந்த சேவை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

   ராஜஸ்தான் இளைஞர்கள் சங்கத்தின் கல்வி டிரஸ்ட் சார்பில் 60ஆவது ஆண்டு புத்தக விநியோக வைர விழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடை பெற்றது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    பொறியியல், கலை அறிவியல் என இலவச புத்தகங்கள் பெற பதிவு செய்யும் மாணவர்களின் துறை சார்ந்து அவர்கள் தேவைக்கு ஏற்ப ஒருவருக்கு 4 முதல் 5 புத்தகங்கள் வழங்கப்படுகிறது. முதலா மாண்டு ஒரு மாணவர் இதற்கு பதிவு செய்தால் அவர் கல்லூரி படிப்பு முடியும் வரை இலவச புத்தகங்கள் வழங்கப்படு கிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 2,000 மாணவர்கள் இந்த சங்கம் மூலம் பயன் பெறுகின்றனர்.

   இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் இளைஞர்கள் சங்கத்தின் தலைவர் ஷ்ரேயன்ஸ் சேதியா, புக் பேங்க் சேர்மன் ராஜேஷ்குமார், நிர்வாக இயக்குநர் சங்கவி ரமேஷ் முத்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   இதுகுறித்து சங்கத்தின் புக் பேங்க் சேர்மன் ராஜேஷ் குமார் கூறுகையில், மாணவர்கள் கல்லூரிகளில் சேர்கின்றனர். ஆனால் புத்தகங்கள் விலை அதிகமாக இருப்பதால் வாங்க சிரமப்படுகிறார்கள். அதற்காகத் தான் ராஜஸ்தான் இளை ஞர்கள் சங்கத்தின் சார்பில் இலவச புத்த கங்கள் வழங்கி வருகிறோம்.

   முதலாம் ஆண்டு புத்தகம் வாங்கி செல்பவர்கள் அதனை திரும்ப கொடுத்து விட்டு இரண்டாம் ஆண்டுக்கான புத்தகங்கள் வாங்கி செல்கின்றனர். கல்லூரி களுக்கு நேரில் சென்று இதுகுறித்து தெரி விக்கிறோம், கல்லூரி முதல்வர்களும் எங்களுக்கு உதவியாக உள்ளனர் என்று தெரிவித்தார்.