சென்னை, பிப்.5 வடக்கு வட்டாரத்தில் 1 முதல் 5 வரை உள்ள மண்டலங்களும், மத்திய வட்டாரத்தில் 6 முதல் 10 வரையிலான மண்டலங்களும், தெற்கு வட்டாரத்தில் 11 முதல் 15 வரையிலான மண்டலங்களும் இடம் பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை பார்வை யிட 5 மண்டலங்களை உள்ளடக்கி 3 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு வட்டாரத்தில் 1 முதல் 5 வரை உள்ள மண்டலங்களும், மத்திய வட்டாரத்தில் 6 முதல் 10 வரையிலான மண்டலங்களும், தெற்கு வட்டாரத்தில் 11 முதல் 15 வரையிலான மண்டலங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த 3 வட்டாரங்களுக்கும் 3 பார்வை யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் கள் பெயர் மற்றும் தொடர்பு எண்களும் வெளியிட்டுள்ளன. வடக்கு வட்டாரம்-டாக்டர் டி.மணிகண்டன் (செல் - 94450 36552) மத்திய வட்டாரம்- ஜான் லூயிஸ் (94450 36532). தெற்கு வட்டாரம்- தட்சிணாமூர்த்தி (94450 36512). இது தவிர 15 மண்டலங்களுக்கும் மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.