districts

img

குடியிருப்புகளை ஒப்படைக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல்

சென்னை, ஜூலை 10-

     சென்னை ஆர்.கே.நகர்,  காசிமேடு புது வண்ணாரப் பேட்டை, பூண்டி தங்கம்மாள்  தெருவில் 520 குடிசை மாற்று வாரிய குடியி ருப்பு வீடுகள் இருந்தது. குடியிருப்புகள் பழுதடைந் ததால், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் அந்த  குடியிருப்புகள் இடிக்கப் பட்டது. அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு 18 மாதத்தில் புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும் என்று கூறி ரூ.8 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

    ஆனால், 3 ஆண்டுகள் கடந்தும் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டி முடிக் கப்படவில்லை. பணிகள்  தொடர்ந்து தாமதமாக நடைபெற்று வருகிறது. தற்போது வெவ்வேறு இடத்தில் வசிக்கும் அப்பகு தியை சேர்ந்த மக்கள் மீன்பிடி தொழில் செய்வ தற்கும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும் சிரமப்படுகின்றனர்.

   இந்நிலையில்,  அடுக்கு மாடி குடியிருப்புகளை உடனடியாக கட்டி கொடுக்க முடியவில்லை என்றால், வீட்டு வாடகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் காசிமேடு-எண்ணூர் எக்ஸ்பிரஸ் விரைவு சாலை யில் திங்களன்று (ஜூலை 10) மறியலில் ஈடுபட்டனர்.

     தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த காவல்  துறையினர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியம் அதிகாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் ஜனவரி மாதத்திற்குள் குடியிருப்புகள் வழங்கப் படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

;