districts

முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு பேராசிரியர்கள் வரவேற்பு

சென்னை,ஜூலை 3-

    தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாண வர்களுக்கு திங்களன்று (ஜூலை3) வகுப்புகள் தொடங்கின.  

    தமிழ்நாட்டில் 164 அரசு  கலை அறிவியல் கல்லூரி கள் செயல்பட்டு வருகிறது.  இதுதவிர அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனி யார் சுயநிதி கல்லூரிகளும் ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்வியை தொடரும் வகை யில் பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட இளங்கலை வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டினர்.

    வழக்கம் போல இந்த  ஆண்டும் பி.காம் பாடப் பிரிவுகளுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டது. அரசு உள்ளிட்ட அனைத்து கல்லூரி களிலும் உயர் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பி.காம் பாடப்பிரிவு கிடைத்தது. 2 வருடத்திற்கு பிறகு இந்த ஆண்டு ஜூலையில் முதலாம் ஆண்டு மாண வர்களுக்கு வகுப்பு தொடங்கி உள்ளது.  

     12 ஆம் வகுப்பு தேர்வு  முடிவு வந்தவுடன் மாணவர்  சேர்க்கையை கல்லூரி கல்வி இயக்ககம் தொடங்கி யது. இந்த ஆண்டு அரசு  கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்கள் முறை யாக பெறப்பட்டன. 1 லட்சத்து 7 ஆயிரம் இடங்க ளுக்கு 2 கட்டமாக கலந் தாய்வு நடத்தி முடிக்கப் பட்டு 84,899 பேர் சேர்க்கப் பட்டுள்ளனர். இன்னும் 22 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

     இந்த இடங்களுக்கு செவ்வாயன்று (ஜூலை 4) நேரடி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பி.சி. இனத்தவர்களுக்கு இன்று மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 5 ஆம் தேதியும், எஸ்.சி-க்கு 6 ஆம் தேதியும், 7 ஆம் தேதி தகுதி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ‘வராண்டா’ கலந்தாய்வு கல்லூரிகளில் நடைபெறு கிறது.

    பள்ளி படிப்பை முடித்து விட்டு முதன்முதலாக கல்லூரி வளாகத்திற்குள் கால்பதிக்கின்ற அளவில் அவர்கள் தங்கள் உயர் கல்வி பயணத்தை திங்க ளன்று தொடங்கினர். புதிதாக வந்த மாண வர்களை கல்லூரியின் மூத்த மாணவர்கள், பேராசி ரியர்கள், உதவி பேராசி ரியர்கள் வரவேற்கும் வகை யில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இனிப்பு மற்றும் மலர் கொடுத்து வரவேற்றதோடு அவர்களை  வகுப்பறையில் அமர  வைத்து உற்சாகப்படுத்தி னர்.