districts

img

விவசாயிகள் புகார் எதிரொலி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காவலர்கள் ஆய்வு

விழுப்புரம், ஜூலை 5-

    விவசாயிகள் புகார் காரணமாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை நேரடியாக எடுத்துச் சென்று விற்பனை செய்ய ஏது வாகவும், அவர்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், இந்த ஆண்டு காரீப் பருவத்தில் நெல் சாகுபடி செய்து பிப்ரவரி மாதம் முதல் அறுவடை தொடங்கியது. இதையொட்டி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தில் 46 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

    இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் கொள்முதல் செய்வதில்லை. எடை போடுவதில் குளறுபடி நடக்கிறது.  மூட்டை ஒன்றுக்கு ரூ.40 கமிஷன் கேட்கிறார்கள் என்று விவசாயிகள் பலரும் குற்றம்சாட்டினர்.  

    இதுகுறித்து, கடந்த மாதம் 23 ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்திலும்,  குற்றச்சாட்டை முன்வைத்து அதிகாரிகளிடம் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

    இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மீது விவசாயிகள் கூறியுள்ள புகாரை தொடர்ந்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் விஜய்கிருஷ்ணன் மற்றும் காவலர்கள் விழுப்புரம் அருகே பெரும்பாக்கம், காணை ஆகிய இடங்களில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டை கள் சரியான முறையில் எடை போடப் பட்டு அவை உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படுகிறதா? புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதா? லஞ்சம், கமிஷன் வாங்குகிறார்களா? முறைகேடான செயல்கள் நடக்கிறதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புகார்கள் இருந்தால் தங்க ளிடம் தெரிவிக்குமாறு விவ சாயிகளிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

;