districts

img

முள்ளங்கி விலை வீழ்ச்சி

கிருஷ்ணகிரி,ஜூலை 30- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர்,சூளகிரி, தளி பகுதிகளில் முள்ளங்கி சாகுபடி செய்து வந்த நிலையில், தற்போது போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக, முள்ளங்கி கிலோ 25,30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, ஒரே நேரத்தில் ஏராளமான விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். ஆனால், தற்போது சந்தைக்கு முள்ளங்கி வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.இதனால் முள்ளங்கி சாகுபடி செய்த விவசாயிகள்  வேதனை அடைந்துள்ளனர்.