வியாழன், செப்டம்பர் 23, 2021

districts

பீடி, கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆதார் - பிஎப் இணைக்க அவகாசம் நீட்டிப்பு

புதுதில்லி,செப்.15- வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பீடி, கட்டுமானம் உள்ளிட்ட சில தொழில் நிறுவன பணியாளர்கள் ஆதாருடன், பிஎப்  கணக்கை இணைப்பதற்கு  டிசம்பர் 31ம் தேதி வரை கால அவ காசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) கணக்கில் இருந்து பணம் எடுத்தல், ஓய்வூதியம் பெறுதல், காப்பீடு பலன்களை பெற பிஎப் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அவகாசம் ஜூன் 1  ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட் டது. தற்போது, 94 சதவீத பிஎப் கணக்குகள் ஆதாருடன் இணை க்கப்பட்டு விட்ட நிலையில், இந்த அவகாசம் வடகிழக்கு மாநி லங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கின் அசாம், அரு ணாச்சல், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்த தனியார் நிறுவனங் கள் தங்கள் பணியாளர்களின் பிஎப் கணக்கை ஆதாருடன் இணைக்க வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதே போல், நாடு முழுவதும் பீடி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தேயிலை, முந்திரி, சணல் உள்ளிட்ட தோட்ட தொழிலாளர்களுக்கும் டிசம்பர் 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

;