திருவள்ளூர், ஆக.18- அனைத்து துறைகளிலும் பெண்க ளுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என உழைக்கும் பெண்கள் திருவள்ளூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூரில் சனிக்கிழமையன்று (ஆக 17), நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் சுமதி தலைமை தாங்கினார். மாநில ஒருங்கி ணைப்பாளர் மகாலட்சுமி சிறப்பு ரையாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் கே. விஜயன், மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன் மாவட்ட து.செயலாளர் ஏ.ஜி.சந்தானம் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். அடிப்படை சேவை திட்டங்க ளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், அங்கன்வாடி, மக்களைத் தேடி மருத்துவம், ஆஷா உள்ளிட்ட திட்ட பணியாளர்களை முறைப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் மற்றும் சமூக பாது காப்பை உறுதிப்படுத்த வேண்டும், கட்டுமானம், தையல், வீட்டுவேலை, கைத்தறி, சாலையோர வியாபாரிகள், கூட்டுறவு, ஆட்டோ, மீன் உள்ளிட்ட தொழில்களில் பணிபுரியும் பெண்க ளுக்கு சமூக பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும், அனைத்து பணியிடங்களிலும் புகார் கமிட்டி அமைத்திட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் மாவட்ட அமைப்பாளராக எம்.சுமதி, துணை அமைப்பாளராக தனலட்சுமி, உஷா ராணி ஆகியோர் உள்ளிட்ட 17 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது.