விழுப்புரம், ஆக 1-
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே உள்ளது எக்கியார் குப்பம் கடற்கரை யோரம். 2 மாதத்திற்கு முன்பு விஷ சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தனர். அதேபோல் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் ஒருவர் கடந்த வாரம் இறந்து விட்டார்.
இந்நிலையில் எக்கியர் குப்பம் பகுதி கடற்கரை ஓரம் இருப்பதால் ஒரு சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனால் அப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட எந்தவித போதைப் பொருட்களை விற்பனை செய்வதையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, எக்கியர் குப்பம் மீனவர் பகுதிக்கு சென்று அந்த பகுதி பொதுமக்களிடம் இந்தப் பகுதியில் யாராவது போதை பொருட்கள் விற்பனை செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
ஆள்நடமாட்டம் இல்லாத இந்த பகுதி யில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை ரகசியமாக கண்காணித்து கைது செய்யும் வகையில் ட்ரோன் கேமராக்கள் மூலம் காவலர்கள் கண்காணிக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப் பிடத்தக்கது.