திருவண்ணாமலை,ஜூலை 25-
சுதந்திர போராட்ட வீரர் என். சங்கரய்யா பிறந்த நாள் விழா திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். பழனி வரவேற்றார். செய்யாறு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஓ.ஜோதி, செய்யாறு மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், வட்டாட்சியர் சுபாஷ், அனக்காவூர் ஒன்றியக் குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், சிபிஎம் வட்டச் செயலாளர் செயலாளர் டி.வெங்கடேசன், ஆசிரி யர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் சோலை பழனி, தொழிற்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வே. சங்கர், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் உதயகுமார் ஆகியோர் உரையற்றினர்.
பள்ளி மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.சண்முகம் நிறைவுரையாற்றினார்.