districts

img

ஓட்டுநர் தின உறுதிமொழி ஏற்பு

ஓட்டுநர் தினமான ஜூன் 1 அன்று மத்திய சென்னை மாவட்டத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சாலை போக்குவரத்து சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே. முருகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளத்தின் பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, மாவட்ட கவுரவத் தலைவர் எம்.சந்திரன், செயலாளர் எம்.உதயகுமார், ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கபாலி, செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க உதவி தலைவர் கே.நூர்முகமது உள்ளிட்டோர் பேசினர்.

;