சென்னை, பிப். 22 - வீதி நாடகக் கலைஞர் பி.ரமா (59) வெள்ளியன்று (பிப்.21) காலமானார். இவர், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சென்னை மண்டல தலைவரும், தமுஎகச மத்திய சென்னை மாவட்டச் செயலாளருமான என்.பாலகிருஷ்ணனின் இணையராவார். அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார். அவரது உடல் கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் உள்ள அவ ரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முரு கன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), செயற்குழு உறுப்பி னர்கள் இரா.முரளி, எஸ்.கே.முருகேஷ், இ.சர்வேசன், கே.ஆறுமுகம், கே.முருகன், வெ.தனலட்சுமி, எஸ்.வி.வேணுகோபாலன் (மத்தியசென்னை), ச.லெனின் (தென்சென்னை), விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் ஏ.நடராஜன், அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவர் ஜி.ஆனந்த், சென்னை கோட்டம்-1 ன் பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், ஓய்வூதியர் சங்கத் தலைவர்க நந்தகுமார், ராமநாராயணன், நந்தகுமார், தமுஎகச மாநிலப் பொரு ளாளர் சைதை ஜெ , துணைத் தலைவர் மயிலை பாலு, செயற்குழு உறுப்பினர்கள் பிரளயன், கி.அன்பரசன், மலர்விழி, மாவட்ட நிர்வாகிகள் சி.எம்.குமார், ஐ.சரத் (தென் சென்னை), பரிசல் செந்தில் நாதன் (மத்திய சென்னை), மணி நாத் (வடசென்னை),கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் நெசப்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.