கடலூர்,ஜூலை 12-
மிக நேர பணிக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க மறுக்கும் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிஐடியு சங்கத்தின் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் சிப்காட் வளாகத்திலுள்ள டாக்ரோஸ் தொழிற்சாலையில் பணி புரிந்து வரும் தொழிலாளர் களுக்கு இது வரையில் வழங்கி வந்த மிகை நேர பணிக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க முடியாது என்று நிர்வாகம் தெரி வித்துள்ளது. 25 ஆண்டுகள் பெற்று வந்த இந்த உரிமையை தற்போது நிர்வாக மறுத்துள்ளது.
மிகக் கொடிய ரசாயன தொழிற்சாலை யில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இந்த சூழ்நிலையில் மிகை நேர பணிக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க மறுப்பது, உற்பத்தி ஊக்கத்தொகை வழங்க மறுப்பது போன்ற நடவடிக்கைகளால் ஒவ்வொரு தொழிலாளியும் மாதம் ஐந்தாயிரம் வரை இழப்பை சந்திக்கிறார்கள்.
நிறுத்தப்பட்ட சலுகைகளை உடனடி யாக வழங்க வலியுறுத்தி தொழிற்சாலை நிர்வாகத்திடம் தொழிற்சங்கம் சார்பில் பலமுறை மனு கொடுத்தும் கண்டுக் கொள்ளவில்லை. இந்த பிரச்சினை குறித்து பேசுவதற்கு தொழிலாளர் நலத் துறை அழைத்தும் நிர்வாகம் வர மறுக்கிறது. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்த னர்.
சிறப்பு தலைவர் பி.கருப்பையன், தலைவர் ஆர்.கோவிந்தன், செயலாளர் எம். தேவநாதன், நிர்வாகிகள் பரிமளம், ஆனந்த பாஸ்கர், சரவணன், குமார், பென்னி துரை, சிலம்பரசன், மாவட்ட இணை செயலாளர் வி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மனு கொடுக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.