திண்டிவனம்,ஜூலை 3-
திண்டிவனம ஆ. கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கு (வராண்டா) மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில், இளநிலை அறிவியல் கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், புவியமைப்பியல், தாவரவியல், புள்ளியியல், மற்றும் இளநிலை வணிகவியல், வணிக நிர்வாகவியல், வரலாறு, தமிழ்,ஆங்கிலம் ஆகிய அனைத்துப் பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வராண்டா மாணவர் சேர்க்கை ஜூலை 4 அன்று துவங்குகிறது.
அன்றைய தினம் பிற்படுத்தப்பட்டோர் (பிசி) மாணவர்களுக்கு, ஜூலை 5 அன்று மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்பிசி) மாணவர்களுக்கு, ஜூலை 6 அன்று ஆதிதிராவிடர் (எஸ்சி) மாணவர்களுக்கான ஜூலை 7 அன்று அனைத்துத் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கும் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
2023-24 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்த இதுவரை இடம் கிடைக்காத தகுதியுடைய மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று கல்லூரி முதல்வர் அறிவுடை நம்பி தெரிவித்திருக்கிறார்.