கடலூர்,மே 29- கடலூர் மஞ்சக்குப்பம், பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி கழிப்பறை மற்றும் குளியல் அறை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். பொதுமக்கள் புழக்கம் அதிகம் உள்ள இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கழிப்பறை பராமரிக்கப்படா மல் பாழடைந்து வந்துள் ளது. இதனால் அருகிலேயே இயற்கை உபாதைகள் கழித்ததால், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் தலைநகரான கடலூருக்கு பல்வேறு பணி கள் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கின்ற னர். அப்படி வரும்போது பொதுமக்கள் இந்த கழிப்பறை மற்றும் குளியல் அறையை பயன்படுத்தி வந்தனர். தற்போது இவை நகராட்சி நிர்வாகம் மாந கராட்சியாக தரம் உயர்த்தும் போது பராமரிக்கப்படாமல் கைவிட்டு விட்டனர். மேலும் இங்கு தினமும் சமூக விரோத செயல்களும் நடந் தேறி வருகின்றன. நகரின் மையப் பகுதியில் துர்நாற்றம் வீசும் இடமாக வும் திகழ்கிறது. மாநகராட்சி நிர்வாகம் இந்த கட்டண கழிப்பறை மற்றும் குளியல் அறையை நவீன வசதி களுடன் சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்