districts

img

பணி மறுக்கப்பட்டதை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

சென்னை, மே 26-

    பணி மறுக்கப்பட்டதைக் கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அயனாவரம் பணி மனையில் 126 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து பெசன்ட் நகர், செங்குன்றம், ஆவடி, திருவான்மியூர், கோயம் பேடு உள்ளிட்ட சென்னை யில் பல இடங்களுக்கு பேருந்துகள் செல்கின்றன. 741 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.

   இந்த தொழிலாளர்கள் அதிகாலை 3 மணிக்கு வீட்டி லிருந்து புறப்பட்டு பணிக்கு வருகின்றனர். தினசரி பேருந்துகள் இல்லை, ஓட்டுநர் இல்லை எனக் கூறி 20 தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் நடத்துனர்கள் அதிகளவு பாதிக்கப்படு கின்றனர். எனவே தின சரி பணி வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட தொழி லாளர்கள் வெள்ளியன்று (மே 26) பணிமனை முன்பு பணி காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

  இதற்கிடையே பொது மேலாளர் இயக்கம் செல்வம், பொது மேலாளர் வடக்கு மண்டலம் செல்வம், துணை மேலாளர் வணிகம் ரவீந்திரன் ஆகியோருடன் சிஐடியு தலைவர் துரை, பொதுச்செயலாளர் தயா னந்தம், பொருளாளர் பாலாஜி, துணை பொதுச் செயலாளர் சிவா ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது சங்க நிர்வாகிகள் பேருந்து கள் இல்லை, ஓட்டு நர்கள் இல்லை என தொழி லாளர்கள் திருப்பி அனுப்பு வதால் ஊதிய இழப்பு ஏற்படுகிறது என்றும், மேலும் முறையான பரா மரிப்பு இல்லாததால் பேருந்துகள் இயக்கப்படு வதில்லை. எனவே முறை யாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள வழித்தடங்களில், வழி நடையின் (டிரிப்) எண்ணிக்கையை குறைத்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அப்போது அதிகாரிகள் பேருந்துகள், ஓட்டுநர்கள் இல்லாமல் தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்படுவதை குறைப்பதற்கான நட வடிக்கை எடுக்கப்படும் என்றும், முதற்கட்டமாக அயனாவரம், அண்ணா நகர், பெரம்பூர் ஆகிய பணி மனைகளில் சுழற்சி முறை யில் நடத்துனர் பணி வழங்கப்படும் என்றும், மற்ற பணிமனைகளில் மேலாண்மை இயக்குநரு டன் பேசி சரி செய்து தரப் படும் என்றும் தெரி வித்துள்ளனர்.

    மேலும் வடக்கு மண்டலத்தில் பேருந்து களை பரா மரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள வழித்தடங் களை கண்டறிந்து, வழி நடையின் மாற்றிய மைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.  

  மேலும் நடத்து னர் இல்லாத பணிமனை களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மாற்றம் கோரினால், அவர்களை அந்த பணிமனைக்கு மாற்றித் தருகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காத்தி ருப்பு போராட்டம் தற்காலி கமாக ஒத்தி வைக்கப்படு வதாக சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

;