districts

img

அதானியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

சூரிய ஒளி மின்சாரம் வழங்க லஞ்சம் ஊழலில் ஈடுபட்ட அதானியை கைது செய்ய வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று (நவ.28) போரூர் மின்வாரிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மதுரவாயல் பகுதிச்செயலாளர் டி.அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.தாமஸ், எஸ்.சரவணசெல்வி, பகுதிக்குழு உறுப்பினர் கே.தண்டபாணி உள்ளிட்டோர் பேசினர்.