கள்ளக்குறிச்சி மாவட்டம், கடையநல்லூர் தரணி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும், தரணி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையை அரசே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், மாநிலச் செயலாளர் ஜோதிராமன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏழுமலை, செயலாளர் ஸ்டாலின் மணி, பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.