தேசிய ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆர்டிஏ) பரிந்துரையை நிராகரிக்க கோரி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் புதுச்சேரி கிளை 2இன் தலைவர் வேணு தலைமையில் புதுச்சேரி பாக்குமுடையான்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் அன்பரசி ஜூலியட், கோட்டப் பொருளாளர் பழனிச்சாமி, இணைச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.