districts

img

மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்து அச்சிறுப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்தும்,கலவரத்திற்கு காரணமான மாநில, ஒன்றிய பாஜக அரசுகளை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், மாதர் சங்கம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி  சார்பில் மற்றும் ஜனநாயக அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் அசோக் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணை செயலாளர் பாலாஜி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஜெயந்தி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மு.தமிழ்பாரதி, தீஒமு மாவட்ட செயலாளர் க.புருசோத்தமன், தமுமுக மாநில அமைப்பாளர் ஷாஜகான் உள்ளிட்ட பலர் பேசினர்.