கிருஷ்ணகிரி,பிப்.17- பாகலூர் பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கர்நாடகா எல்லையான மாலூர் சாலை யில் ஓசூரில் இருந்து 12 கிலோமீட்டர் தூர த்தில் தமிழக எல்லைக்குள் அமைந்துள்ள பாகலூர் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. ஊராட்சியாக உள்ள இங்கு தற்போது 50,000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர். இந்த பேருந்து நிலை யத்திலிருந்து பெங்களூரு செல்லும் சர்ஜா புரம் சாலையும் கர்நாடக மாநில தொழிற்சாலை பகுதியான மகலூர் சாலையும் சூளகிரி பேரிகை சாலையும் பிரிகிறது. இப்பகுதிக்கு என்று காவல் நிலை யமும் அரசு மருத்துவமனையும் உள்ளது. ஓசூரிலிருந்து பாகலூர் நான்கு வழிச்சாலை பிரமாண்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு ஏற்ப பேருந்து நிலையம் சிறிதளவு கூட மாற்றம் செய்யப் படாமல், சிமெண்ட் தளம் கூட போடப்படாத நிலையில் மேடு பள்ளங்களாகவும், முறை யாக பரா மரிக்கப்படாத சாலைகள் சேரும் சகதியுமாகவும் உள்ளது. தினம்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த பேருந்து நிலையத்தை கடந்து சென்று வருகின்றனர். பாகலூரை சுற்றிலும் அருகருகே உள்ள 8 தனியார் பள்ளிகளின் பேருந்துகளும் காலை, மாலை வேலைகளில் மாண வர்களை ஏற்றி, இறக்கும் பணிகளை செய்து வருகிறது. ஏற்கனவே பாகலூர் அருகில் 12 தொழிற்சாலைகள் உள்ள நிலையில் புதிதாக 10 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தின் எல்லையாக மாலூரும் தொழிற்சாலைகள் நிறைந்த சர்ஜா புரமும் அசுர வேகத்தில் வளர்ந்து பாகலூருடன் ஒன்றாகி வருகிறது. ஆனால் பாகலூருக்கு அதற்கேற்ற பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வில்லை. குறைந்தபட்சம் இங்கு கழிப்பறைகள் வசதி கூட கிடையாது. பேருந்து நிலையத்திலிருந்து பிரியும் 3 சாலைகளும் மிகவும் குறுக லாகவே உள்ளது. தினமும் சுமார் 50ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்லக்கூடிய இங்கு இரவு 12 மணி வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. ஓசூர் பாகலூர் சாலை இருபுறமும் உள்ள அனைத்து தனியார் நிலங்களும் குடியிருப்பு பகுதிகளாக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் மக்க ளின் நலனுக்காக பாகலூருக்குள் உள்ள அனைத்து சாலைகளையும் விரிவுப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டியும் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தேவராஜனும் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.