districts

img

அரசு மருத்துவமனையில் காலிபணியிடங்களை நிரப்ப கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவ ஊழியர்கள் நேரத்தை முறைப்படுத்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டக்குழு உறுப்பினர் ஜாபர் சாதிக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு அமைப்பாளர் கேசவன், ரவி, ரங்கன், மக்புல்ஜான் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

;