districts

img

சினிமா பார்க்க வந்தவர்கள் மீது திரையரங்க ஊழியர்கள் தாக்குதல்

சிதம்பரம், நவ. 19- சிதம்பரத்தில் உள்ள வடுக நாதன் தியேட்டரில்,  காரைகாட்டு சொக்கலிங்கம் தெருவை சேர்ந்த  சிரஞ்சீவி   அவரது அண்ணன், அண்ணி மற்றும் குழந்தைகள் என மொத்தமாக 7 பேர் திரைப்படம் பார்க்க சென்றுள்ளனர். திரையரங்கிற்குள் நுழை வதற்கு முன்னால் திரையரங்கு ஊழியர்கள்  சிரஞ்சீவியை பரிசோதனை செய்திருக்கிறார்கள். பரிசோதனையின் போது சிரஞ்சீவியிடம் நீங்கள் மது அருந்திவிட்டு வந்திருப்பதாக வாக்குவாதம் செய்துள்ளனர்,  சிரஞ்சீவி தனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை என்றும் நான் மது ஏதும் இதுவரையில் அருந்தியதே இல்லை என பதிலளித்துள்ளார். ஆனால் வாக்கு வாதம் முற்றி திரையரங்க ஊழி யர்கள் சிரஞ்சீவியை தாக்கினர். அவரது தாயார், அண்ணி, தங்கை மற்றும் குழந்தைகள் எதிரில் கடுமையாக திரை யரங்க ஊழியர்கள் கட்டை யால் அடித்ததில் சிரஞ்சீவி யின் மண்டையில் கடும் காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு 9 தையல்கள் போடப்பட்டுள்ளது. அவரை காப்பாற்றை சென்ற அவரது சகோதரர் பழனிசாமிக்கு முகம் மற்றும் கால் முட்டி முழுவதும் காயம் உள்ளது, மற்றொரு சகோதரான ராமராஜன் கால் கட்டையால் அடித்ததில் பாதிக்கப்படுள்ளது. இந்த தாக்குதலை திரை யரங்கின் மேலாளர் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளார். படுகாயம் அடைந்தவர்கள் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனையறிந்த மார்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகர செயலாளர் எஸ்.ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் ஜெயசித்ரா மாதர் சங்க மாவட்ட தலைவர் வி.மல்லிகா, கட்சியின் நகர்க்குழு உறுப்பினர்கள் எம்.அமுதா, எஸ்.குமரவேல், எஸ்.ஆகாஷ், எஸ் எஃப் ஐ நகர செயலாளர் சசிதரன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதுகுறித்து ரமேஷ்பாபு கூறுகையில் காவல்துறையினர் விசாரித்து தாக்குதல் நடத்திய ஊழியர்கள்  மீது  கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால் தாக்குதலைவேடிக்கை பார்த்த மேலாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திரையரங்க சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முறையாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  வடுகநாதன் மற்றும் லேனா திரையரங்கத்தில் தொடர்ச்சியான மனித உரிமை அத்துமீறல் என்பது நடந்து கொண்டிருக்கிறது திரையரங்கிற்கு வரும் பார்வை யாளர்களை மோசமாக கையாளு வது குழந்தைகளிடம் இருக்கிற லாலி பாப்பை கூட பிடுங்கி குப்பைத்தொட்டியில் எரிவது பெண்கள் இருக்கும்போது  ஆபாசமாக பேசுவது என தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளது. அதனை எல்லாம் உறுதிப் படுத்தும் விதமாக இந்த சம்ப வம் நிகழ்ந்துள்ளது எனவே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது மட்டுமல்லாமல் லேனா வடுக நாதன் தியேட்டர் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் தாக்கு தலுக்குள்ளாகி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிரஞ்சீவிக்கு அவரது சகோதரர்களுக்கும் இழந்த பொருளை மீட்டு தருவது மட்டுமல்ல, தியேட்டர் நிர்வாகத்திடம் உரிய இழப்பீடு பெற்றுதர வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காவல்துறையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.  ஆனால் தாக்குதலில் ஈடுபட்ட வர்களை காவலதுறையினர் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டிக்கும் விதமாக திங்கள் கிழமை சிதம்பரத்தில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது.