districts

சாலையோர சிறுகடை வியாபாரிகளை பாதுகாத்திடுக

செங்கல்பட்டு, டிச. 28- செங்கல்பட்டு அரசு மருத்துவ மனை அருகில் உள்ள சாலையோர  சிறு கடை வியாபாரிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக்குழு வேண்டுகோள் விடுத் துள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாவட்ட செய லாளர் ப.சு.பாரதிஅண்ணா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.   செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் சிறு கடை வியாபாரம் செய்து வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதா ரத்தை மாவட்ட நிர்வாகம் பறித்துள் ளது. அதே போன்று  மருத்துவமனை அருகில் ஆட்டோ மற்றும் ஆம்பு லன்ஸ் ஸ்டாண்டுகளை அகற்றி நூற்று க்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றிலடித்துள்ளது. மேலும் மருத்து வமனை எதிரில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான காலி இடத்தை டெண்டர்விட்டு, அதில் வாகன நிறுத்து மிடம் ஏற்படுத்த உள்ளதாக கூறப்படு கிறது . அதற்கேற்ப தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ் சாலைக்கு சொந்தமான இடத்தை டெண்டர் விடமுடியுமா? பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பாதசாரிகள் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து செல்வதற்கு கூட  இடம் ஒதுக்கா மல் வேலி அமைப்பது சட்ட விரோத மாகும்.  செங்கல்பட்டு மருத்துவமனைக்கு காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அவர்கள் நடப்பதற்கு கூட இடம் விடாமல் வேலி அமைத்ததை கைவிடவேண்டும். பார்க்கிங் ஸ்டாண்ட்  அமைக்க விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விரை வில் அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.