கடலூர், ஆக.22- விருத்தாசலத்தில் குடிமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. குடியிருக்க இடமில்லாத, ஒரே குடும்பத்தில் நெருக்கடியில் வாழ்கின்ற மக்களுக்கும், நீர்நிலை புறம்போக்கில் குடியிருக்கும் மக்களுக்கும், மனைப்பட்டா கேட்டு பல ஆண்டுகளாக மனு கொடுத்து காத்திருக்கும் மக்களுக்கும் இலவச மனை பட்டா வழங்க வலியுறுத்தி விருத்தாசலம் துணை வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். சிபிஎம் வட்டச் செயலாளர் ஆர்.கலைச்செல்வன் தலைமை தாங்கினார். சிஐடியு தலைவர் என்.ஆர்.ஆர்.ஜீவா னந்தம், ஒன்றிய அமைப்பாளர் கே.எம்.குமர குரு, கம்மாபுரம் ஒன்றிய அமைப்பாளர் (தெற்கு) ஆர்.இளங்கோவன், கம்மாபுரம் ஒன்றிய அமைப்பாளர் (வடக்கு) யூ.சுந்தர வடிவேல் , வட்டக் குழு உறுப்பினர்கள் கே.அன்புச்செல்வி, எம்.ஜெ.நெல்சன், கே.சின்னத்தம்பி, ஆர்.கோவிந்தன், பி.செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.