districts

சிபிஎம் தொடர் போராட்டம் எதிரொலி சிலிண்டருக்கு ரூ.300 மானியம் கிடைத்தது

புதுச்சேரி,ஜூலை.10-

    மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் எதிரொலியாக சிலிண்டருக்கு ரூ.300 மானியம்  வழங்குவதற்கு புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டது.

   என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக கூட்டணி அரசு புதுச்சேரியில் ஆட்சி பொறுப்பேற்று 2  ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் ஆதரவால் புதுச்சேரியிலும் பாஜக கூட்டணி அரசின் ஆட்சி அமைந்தால், அதிக அளவில் நிதி உதவிகள் கிடைக்கும் என்று சட்டப்பேரவை தேர்தலின் போது என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் முதல்வர் ரங்கசாமி  மக்களிடம் உறுதி அளித்திருந்தார்.  

   மேலும் புதுச்சேரியில் தன்னாட்சி நிறு வனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை சம்பளமும் வழங்கப்படும் என்றும், மூடப்பட்டுள்ள ரேசன்கடைகளை திறக்கப்படும் என்றெல்லாம் உறுதி அளித்திருந்தார். அதேப்போல் மாநிலத்தில் முதல்வராக கூட்டணி அரசு பதவி ஏற்று  முதல் பட்ஜெட்டை முதல்வர் தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் நேரத்தில் கூறப்பட்ட திட்டங்களை  நிதி சிக்கலால் தீர்க்கப்படவில்லை.

அறிவிப்பு

     என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக கூட்டணி அரசு மாநிலத்தில் மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறக்கப்படும். மக்களுக்கு கொடுத்த பல்வேறு திட்டங்களை அறி வித்ததை  நினைவு படுத்தி, மார்க்சிஸ்ட் கட்சி மக்களை திரட்டி புதுச்சேரி, காரைக்காலில்  தொடர் போராட்டங்களை நடத்தியது.

     ரேசன் கடைகளை  திறக்க தொடர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, சிபிஎம் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அரசின் தலைமைச் செயலாளர்,  மூடப்பட்டுள்ள ரேசன் கடைகள் திறக்கப்படும் என்று உறுதியளித்தார்.  

     இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கேஸ் சிலிண்டருக்கு ரூ. 300 மானியம் வழங்கப்படும். குடும்ப தலைவிக்கு  மாதம் ரூ.1000 வழங்கப்படும், மாநிலத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு பிறக்கும் பெண் பிள்ளைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி வழங்கப்படும் என்றெல்லாம் நிதி நிலை அறிக்கையில் உறுதியளித்திருந்தார்.

போராட்டம்

    முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்புகள், நலத் திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. இதனைக் கண்டித்து ஜூலை 28 முதல் 30 வரை மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போராட்டம் நடத்தியது.

    இந்தப்போராட்டத்தை தொடர்ந்து, சிவப்பு குடும்ப அட்டை வைத்திருப் போருக்கு கேஸ் சிலிண்டருக்கு மாதம்  ரூ.300, மஞ்சல் அட்டைதாரர்களுக்கு 12 மாதங்களுக்கு ரூ.150 மாதங்களுக்கும் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு அரசாணையை வெளியிட்டுள்ளது

   மாநில அரசு. மேலும் புதிதாக பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதியாக வைக்கும் திட்டத்திற்கும்  அரசாணை அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டங்கள் செயல்படுத்தும் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டமே காரணம்  என்பது குறிப்பிடத்தக்கது.