சென்னை, ஜூலை 21-
தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி கு.முருகன் (64) வெள்ளிக் கிழமை (ஜூலை 22) அதி காலை சென்னையில் காலமானார்.
இவர் வணிகவரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சென்னை மாவட்ட பகுதி நிர்வாகியாகவும், மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி யும் பணியாற்றியவர்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு தனது இறுதி மூச்சுவரை ஏழை எளிய மக்களுக்காவும், மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக் காகவும் போராடினார்.
அம்பத்தூர் கொரட்டூர் பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த அவரது உடலுக்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, முன்னாள் பொதுச் செயலா ளர் வி.தேவன், முன்னாள் மாநில நிர்வாகி கே.எம்.தியாகராஜன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத் தின் நிர்வாகிகள் பட்டாபி, எஸ்.ஏ.வெற்றி ராஜன், மனோகரன், தமிழ்நாடு வணி கவரி பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சா.டேனியல் ஜெயசிங், ரவிராஜ், பால கிருஷ்ணன், முன்னாள் நிர்வாகிகள் சுப.வைத்திய நாதன், பிரகாசம், பிரான்சிஸ், யோகானந்தன், கிருஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்க வடசென்னை மாவட்டத் தலைவர் வெ. விஜயகுமரன், செயலாளர் ம.அந்தோணிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரரா ஜன், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், மாவட்டத் தலைவர் எஸ்.ராணி, செயலாளர் ஜெயச்சந்திரன், நிர்வாகிகள் நடராஜன், ராஜூ, கலைவாணன் (கரு வூலத்துறை), நடராஜன் (போஸ்டல்) உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் வெள்ளி யன்று மாலை கீழ்ப்பாக்கத் தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.