districts

img

தோழர் ஜெயராமன் இல்லத் திருமணம்….

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் சகோதரரும் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினருமான ஆர்.கருணாநிதி - மறைந்த கே.மஞ்சுளாதேவி தம்பதியின் மகன் க.அகிலன்-பொம்மை (எ) கு.ரம்யா திருமணம் திருவொற்றியூரில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் திங்களன்று (அக். 21) நடைபெற்றது. மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், பா.சுந்தர்ராஜன், வடசென்னைமாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், எஸ்.பாக்கியலட்சுமி, எல்.பி.சரவண தமிழன், பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல், திருவொற்றியூர் பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் கே.ஆர்.முத்துசாமி, சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, ஜி.வரதராஜன், மு.முத்துக்குமார், என்.ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.