districts

img

தோழர் ஹேமாவதி உடல் தகனம்

சென்னை, அக். 22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஹேமாவதியின் உடல் சனிக் கிழமையன்று (அக்.22) கீழ்க்கட்டளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சென்னை தொலைபேசி மாநில துணைத் தலைவரான தோழர் எஸ்.ஹேமாவதி வெள்ளியன்று (அக்.21) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 62. மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு  கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குண சேகரன், கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், பி.சுகந்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், கே.வனஜகுமாரி, ச.லெனின்,  எஸ்.குமார், எம். செந்தில் குமார், பா.பால கிருஷ்ணன், சுந்தர் (தென்சென்னை), வே.தனலட்சுமி (மத்திய சென்னை), ஆலந்தூர் பகுதிச் செயலாளர் வெங்கடேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.ஏ.லதா, எஸ்.அரிகிருஷ்ணன், எஸ்.முகமதுரஃபி, ம.விஜயகுமார், இ.மூர்த்தி, ஜெயவேல், எம்.தாமு, இ.ரவி, வி.தாமஸ், அசோகன், தீ.சந்துரு, ரா.ஜான்சி, ரா.பாரதி (தென் சென்னை), எஸ். மனோன்மணி, எஸ்.வி. வேணுகோபாலன் (மத்திய சென்னை), எம்.சரஸ்வதி எம்.சி., வடசென்னை மாவட்ட  முன்னாள் செயலாளர் கே.கிருஷ்ணன், பிஎஸ்என்எல் சிபிஎம் இடைக்குழு செயலாளர் ஆர்.ராஜசேகர், பிஎஸ்என்எல்இயு சென்னை தொலை பேசி மாநிலச் செயலாளர் ஸ்ரீதர்சுப்பிரமணி யம், முன்னாள் மாநிலத் தலைவர் ஐசக், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத் தலைவர் சி.கே.நரசிம்மன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அன்னாரது உடல் தகனம் செய்யப்பட்டது.

;