சென்னை,ஏப்.6- மத்திய சென்னை வங்கி அரங்க மூத்த உறுப்பினரும், சென்டிரல் வங்கி எஸ்சி, எஸ்டி ஊழியர் நலச்சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான இ.சண்முகம் வியாழனன்று (ஏப்.6) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68. வங்கி ஊழியர்களை ஒருங்கிணைப்பதில் சிறப்பாக பணியாற்றிவர். வங்கி அரங்க இடைக் கமிட்டி உறுப்பினராக நீண்ட காலம் துடிப்புடன் இயங்கிய அவர், வாசிப்பதை நேசித்து வந்தார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் இ. சர்வேசன், பி.சந்திரசேகரன், இடைக் கமிட்டி செயலாளர் எஸ்.வி.வேணுகோபாலன், கவிஞர் நா.வே.அருள், சி.பி.கிருஷ்ணன், சி.பி.சந்திரசேகரன், ஜி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கொரட்டூர் சுப்புலட்சுமி நகர் அருகே உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.மறைந்த சண்முகத்திற்கு முருகம்மாள் என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.