districts

img

தோழர் பி.மாச்சான் முதலாமாண்டு நினைவுதினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கிளைச் செயலாளர் மறைந்த தோழர் பி.மாச்சான் முதலாமாண்டு நினைவுதினம் திங்களன்று (அக்.21) அனுசரிக்கப்பட்டது. அண்ணாநகர் என்எஸ்கே நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு கட்சியின் பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன் தலைமை தாங்கினார். மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சுந்தரம், கே.மணிகண்டன், பகுதிக்குழு உறுப்பினர்கள் எம்.முத்துராஜன், பி.சீனிவாசன், த.சுகுமார், ஏ.பெரியசாமி, ஏ.பி.செல்வம், எம்.உஷா, கிளைச்செயலாளர் எம்.ஆனந்தன் உள்ளிட்டோர் பேசினர்.