சென்னை, மே 30- சிமாட்ஸ் பொறியியல் கல்லூரியில் ‘சிமாம் 2023’ என்ற பெயரில் கல்லூரி ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த விழா மாணவர்களின் பன்முகத்தன்மை, திறமை மற்றும் ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டிற்கான சிறந்ததொரு வாய்ப்பாக இருந்தது என்று சிமாட்ஸ் இயக்குநர் டாக்டர் தீபக் நல்லசுவாமி கூறினார். நடனம் முதல் மனதைத் தூண்டும் இசை நிகழ்ச்சிகள் வரை இடம் பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிமாட்ஸ் பொறியியல் கல்லூரியின் மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய் திருந்தனர். இதில் சிமாட்ஸ் இயக்குநர் டாக்டர் ரம்யா தீபக், துணைவேந்தர் டாக்டர். சதாராம் சிவாஜி, இசைய மைப்பாளர் டிஎஸ்பி, திரைக்கலைஞர் வரலட்சுமி சரத்குமார், குக் வித் கோமாளி புகழ் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட ஏராள மான பேர் கலந்து கொண்டனர்.