districts

img

சிந்தாதரிப்பேட்டை மேம்பாலம் நவம்பரில் திறப்பு: மேயர் தகவல்

சென்னை, செப். 3 - சிந்தாதரிப்பேட்டை அருணாச்சலம் சாலையில் அமைக்கப்பட்டு வரும் புதிய மேம்பாலம் நவம்பர் மாதத்திற்குள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிந்தாதரிப்பேட்டை அருணாச்சலம் சாலை - எழும்பூரை இணைக்கும் வகையில் கூவம் ஆற்றில் வாகன மேம்பாலம் உள்ளது. இந்தச் சாலையில் சிந்தாதரிப்பேட்டையின் மார்க்கெட் அமைந்துள்ளது. மேலும், காவல்நிலையம், மீன் மார்க்கெட், கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், பள்ளி போன்ற வையும் உள்ளன. இந்தச் சாலை குறு கலாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்த னர். இதனையடுத்து அரு ணாச்சலம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப் பட்டது. எழும்பூரில் இருந்து வரும் வாகனங்கள் பாலத்தை கடந்து இடது புறம் திரும்பி கூவம் கரையோர மாக சென்று மே தின பூங்காவை அடைந்தன. இருப்பினும், வாகன பெருக்கத்தின் காரணமாக இந்த சாலையில் போக்கு வரத்து நெரிசல் குறைய வில்லை. மேலும், பழைய பாலத்தின் அகல மும் குறுகியதாக உள்ளது. எனவே, பழைய பாலத்திற்கு இணையாக 10 கோடி ரூபாய் செல வில் மற்றொரு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் இறுதி கட்ட பணிகள் நிறை வடைந்து பக்கவாட்டு இரும்பு சுவர்கள், நடை பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. “இந்த பாலப்பணிகள் விரைந்து முடித்து நவம்பர் மாதத்திற்குள் திறக்கப் படும்" என்று மாநகர மேயர் ஆர்.பிரியா தெரி வித்துள்ளார்.  வாகன போக்குவரத்த நெரிசலை குறைக்க சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பாலப்பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு, நவம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தி.நகர் ஆகாய நடை மேம்பாலம் வரும் அக்டோபரில் மாதத்திற்குள் திறக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

;