districts

img

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் முகாம்

ராணிப்பேட்டை, ஜூலை. 26 -  ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் 7 ஊராட்சி ஒன்றியங்களில் வியாழனன்று (ஜூலை. 25) முகாம்கள் நடைபெற்றது.  அதன்படி, சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் ஜம்புகுளம், கேசவனாங்குப்பம், மருதாலம், செங்கல்நத்தம், தகர குப்பம், வேலம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கும் வகையில் மருதாசலம் கூட்டு ரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர்  சந்திரகலா தலைமையில் தலைமை வகித்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்ட மனுக்க ளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் கலைக்குமார், வெங்கட்ராமன், துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.