districts

img

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா

சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்று வந்த சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா மார்ச் 1- ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை 5 நாட்கள்  நடைபெற்றது.  ஞாயிற்றுகிழமை நிறைவு நாளில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராம. கதிரேசன் கலந்துகொண்டு நாட்டியக் கலைஞர்களுக்கு சால்வையணிவித்து பதக்கங்களை வழங்கினார். நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் தலைவர் முத்துகுமரன், செயலாளர் சம்பந்தம், பொருளாளர் பா. பழனி உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.