districts

img

சென்னை ஓப்பன் மகளிர் சர்வதேச போட்டி

சென்னை ஓப்பன் மகளிர் சர்வதேச போட்டியின் இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை கனடாவின் கேப்ரியேலா டாப்ரோஸ்கி-பிரேசிலின் லூயிசா ஸ்டெபா இணை வென்றது. இந்த இணைக்கு முதல் பரிசாக ரூ.9.58 லட்சமும் கேடயமும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பிடித்த அன்னா பிளிங்கோவா (ரஷ்யா)- நட்டாலியா (ஜார்ஜியா) இணைக்கு ரூ.5.38 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற ஜோடியை மக்களவை உறுப்பினர் கனிமொழி பாராட்டினார். முன்னதாக கேடயத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். பின்னர் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போலாந்தின் மக்டா லினெட்  செக் குடியரசின் லிண்டாவுக்கு எதிரான முதல்  செட்டை  6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். 2வது செட்டை லினெட் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். 3வது செட் விறுவிறுப்பாக நடைபெற்றது.

;