districts

சென்னை முக்கிய செய்திகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனை

சென்னை, செப்.10- தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் ஆண்டுதோறும் தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு தீவுத்திடலில் சிறப்பு விற்பனை கடைகள் அமைக்கப் படுவது உண்டு. சென்னை: தீபாவளி பண்டி கையை முன்னிட்டு சிவகாசியில் தயாரிக்கப் படும் பட்டாசுகள் நாடு முழுவதும் பல  ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு விற்பனை  செய்யப்படும். இந்த ஆண்டும் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள் ளதால் மற்ற பகுதிகளில் பட்டாசு விற்ப னைக்கு சிவகாசி பட்டாசு விற்பனை யாளர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.  இதையொட்டி சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இரவு-பகலாக பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பட்டாசுகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் முறைப்படி  அனுமதி பெற வேண்டும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர் களுக்கு ஆய்வு செய்து உரிமம் வழங்கும் பணியும் நடந்து வருகிறது.  இந்த ஆண்டு தீவுத்திடலில் பட்டாசு  விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக சுற்றுலாத்துறை அறிவித்துள் ளது. அதன்படி தீவுத்திடல் மைதானத்தில் 55 பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கடை கள் ஒவ்வொன்றும் தலா 3 மீட்டர் இடைவெளி விட்டு அமைக்கப்பட வேண்டும்  என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர  பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும்  பட்டாசு கடைகள் அருகே செய்வதற்கு முடிவு  செய்யப்பட்டுள்ளது. தீவுத்திடல் பட்டாசு  கடைகளில் அக்டோபர் 11-ந் தேதி விற்பனை  தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு மறுநாள் 25-ந் தேதி வரை அங்கு பட்டாசு விற்பனை நடைபெறும். மொத்தம் 15 நாட்களுக்கு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை நடைபெற வுள்ளது.


நன்னடத்தை ஆணையை மீறியவருக்கு  93 நாள் சிறை

காஞ்சிபுரம், செப்.10- கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு என்பவரை   சிறையில் அடைத்தனர்.   மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வர்கள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  டாக்டர்  சுதாகர் அறிவுறுத்தியுள்ளார். அதையொட்டி காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் சதாவரத்தை சேர்ந்த பாபு என்ற  லொட்டை பாபு (வயது 26) நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. மூலமாக ஆணை பிறப்பிக்கப் பட்டது. இந்த நிலையில் பாபுவை கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். நன்னடத்தை  பிணையை மீறிய குற்றத்திற்காக பாபுவை 93 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார்.


இன்று  தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம், செப்.10- கொரோனா தொற்றை தடுப்பதற்காக 15 வயதில் இருந்து 60 வயதிற்கு மேற் பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஞாயிறன்று  (செப். 11 ) காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத் தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 1,059 மாபெரும் தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளு மாறு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள் ளார்.


கூலிக்கு தங்க கடத்தல் தர மறுத்தவருக்கு சராமரி உதை

சென்னை, செப்.10- துபாயில் இருந்து  சென்னைக்கு பணத்திற்காக  கடத்தி  வரப்பட்ட 50 பவுன் தங்கத்தை ஒப்படைக்க மறுத்தவருக்கு சராமரி உதைவிழுந்தது. திருவள்ளூர் ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் குருவியாக செயல்பட்டு வருகிறார். கடந்த 7ஆம் தேதி துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி  வரப்பட்ட 50 பவுன் தங்கத்தை மைக்ரோ வேவனில் வைத்து  எடுத்துச்சென்று ஒருவரிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்காக ஆனந்தராஜீக்கு ரூ.30 ஆயிரம் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சொன்னபடி ஆனந்தராஜ் தங்கத்தை கொண்டு சேர்க்கவில்லை. இதையடுத்து தங்கத்தை கொடுத்து அனுப்பிய நபர்கள் ஆனந்தராஜ் அவரது தம்பிகள் ஷாம், பிச்சைமுத்து மற்றும் ஷாம்குமார்  ஆகிய 4 பேரை காரில் அழைத்து வந்து அரும்பாக்கம் லாட்ஜில் தங்க வைத்து தாக்கி உள்ளனர்.  இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் சம்பவம்  நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக காரைக்காலைச் சேர்ந்த இதயத்துல்லா, பாலகன், ஆற்காட்டை சேர்ந்த ரவிக்குமார், நவீன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மீஞ்சூர் ஒன்றியத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

பொன்னேரி,செப்.10- திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் உள்ளன.   ஒன்றியத்தில் அடங்கிய பழவேற்காடு, திருப்பாலை வனம் பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பாலைவனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்த மத்திய குழு மழை  நீர் சேகரிப்பு அமைவிடத்தை பார்வையிட்டு பள்ளி வளாகத்தில் மரச் செடிகள் நட்டனர். பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டமைப்பு குறித்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் யாஸ்மி னிடம் கேட்டறிந்தனர்.


இருசக்கர - நான்கு சக்கர வாகனங்கள் ஏலம்
திருவள்ளூர், செப். 10- திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 394இருசக்கர வாகனங்கள், 10 மூன்று சக்கர வாகனங்கள், 26, 4 சக்கர வாகனங்கள், ஒரு ஆறு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளன. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருகிற 19, 20 மற்றும் 21 ஆகிய 3 நாட்களில் காலை 10 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தின் அருகே 431 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள் முக கவசம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். முன்வைப்பு கட்டண தொகையாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.1000, 3 சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.


 

;