districts

சென்னை முக்கிய செய்திகள்

தடை விதிக்கப்பட்ட பெரிய கடைகள் எவை?  அரசு விளக்கம்

சென்னை, ஏப்.28- தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி யிருப்பதாவது:- கொரோனா பரவல் அதிகரித்தது தொடர்பாக, அனைத்து பெரிய கடை நிறு வனங்கள் கடந்த 26 ஆம் தேதியில் இருந்து  இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று அரசு கடந்த 24 ஆம் தேதி  உத்தரவு பிறப்பித்தது. மிகப்பெரிய கடைகள் என்று எந்த கடைகளை குறிப்பிட வேண்டும் என்று ஆட்சியர்கள் பலர் சந்தேகங்களை எழுப்பி  அரசுக்கு கடிதம் எழுதி இருந்தனர். இந்த சந்தேகங்களுக்கு அரசு தற்போது  விளக்கம் அளிக்கிறது. அதன்படி, 3 ஆயிரம் சதுர அடி மற்றும் அதற்கு மேல் அளவுள்ள ஷோரூம் கொண்ட கடைகள் அனைத்தும் பெரிய அளவிலான கடைகள்  என்று கருதப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் கூட்டம் குறைந்ததால்  14 ரயில்கள் ரத்து

சென்னை, ஏப்.28- தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது  அலை வேகமாக பரவுவதால் ரயில் மற்றும்  விமானங்களில் பயணம் செய்ய பொது மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் ஒரு சில ரயில்கள் கூட்ட மின்றி காலியாக ஓடுகின்றன. இதன்  காரணமாக தெற்கு ரயில்வே 14 எக்ஸ்பி ரஸ் ரயில்களை ரத்து செய்துள்ளது. இராமேஸ்வரம்-கன்னியாகுமரி இடையே  வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் சிறப்பு ரயில், இராமேஸ்வரத்தில் இருந்து மே 1ஆம்  தேதி முதலும், கன்னியாகுமரியில் இருந்து  மே 2 ஆம் தேதி முதலும் ரத்து செய்யப்படு கிறது. கோவை, பெங்களூர் கிருஷ்ணராஜ புரம் இடையே வாரத்தில் 2 நாட்கள் இயக்கப்  படும் உதய் எக்ஸ்பிரஸ் வியாழனன்று (ஏப்.29) முதல் இரு வழியிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூ ருக்கு வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட்ட சதாப்தி ரயில்  இரு வழியிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட்ட சதாப்தி ரயிலும் இரு வழித் தடத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மங்களூர் சென்ட்ரல்- லோக்மான்யா இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயிலும் இருமார்க்கமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இவை உட்பட 14 ரயில்கள் ரத்து  செய்யப்பட்டு உள்ளன. இதை போல பயணி கள் குறைவான எண்ணிக்கையில் இருந்த தால் 40-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமா னங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து பல்வேறு நக ரங்களுக்கும், பிறமாநிலங்களுக்கும் செல்  லக்கூடிய பயணிகள் குறைந்ததால் அந்த சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் இ-பாஸ், கொரோனா பரி சோதனை போன்ற கட்டுப்பாடுகள் விமான  பயணத்திற்கு தீவிரப்படுத்தப்பட்டு உள்ள தால் பயணிகள் பயணத்தை தவிர்த்து வரு கிறார்கள்.

இந்தியன் -2 பட விவகாரம் தீர்க்க முடியவில்லை: இயக்குநர் ஷங்கர் பதில்

சென்னை, ஏப்.28- ‘இந்தியன் 2’ பட தயாரிப்பு விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர், லைகா தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலான சமரச பேச்சு வார்த்தை தோல்வியடைந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் - 2’  படத்தை முழுமையாக முடித்து கொடுக்கா மல் பிற படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா  நிறுவனம் சார்பில், சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல்  செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசார ணைக்கு வந்த போது, இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காண நீதிமன்றம் அறி வுறுத்தியது. இந்த வழக்கு தலைமை நீதிபதி  சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் (ஏப்.28) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘ஏப்ரல் 24ஆம் தேதி இயக்குநர் ஷங்கர், லைகா தயாரிப்பு நிறுவனம் சுமார் இரண்டரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஜூன்  முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை  முடித்துக் கொடுத்து விடுவதாகத் தெரிவிக் கப்பட்டது. ஆனால் அதை தயாரிப்பு நிறு வனம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜூன் மாதத்  தில் படத்தை முடிக்க தயாரிப்பு நிறுவனம்  வலியுறுத்தியது. இதனால் பேச்சுவார்த்தை  தோல்வியடைந்தது. எனவே வழக்கை விசா ரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை  ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள்,  இயக்குநர் ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்  காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க