ஒரே காவல் நிலையத்தில் 7 பேருக்கு கொரோனா
சென்னையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் கள் மற்றும் காவல்துறையினருக்கு அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சிகிச்சை அளிக்கப் படுகிறது. ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் பணிபுரியும் 6 போலீசாருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு தொற்று இருப் பது உறுதி செய்யப்பட்டது.
‘ரெம்டிசிவிர்’ மருந்து வாங்க குவியும் மக்கள்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ரெம்டிசிவிர் மருந்து வாங்க 4ஆவது நாளாக சென்னைக்கு ஏராளமான மக்கள் வந்தனர். இதனால் சென்னை கீழ்பாக்கம் மருத்துவ மனையில் ரெம்டிசிவிர் மருந்து வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இந்த ரெம்டிசிவிர் மருந்தை, மாவட்ட தலைமை மருத்துவமனை களில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும என்று பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காலமானார்
புதுச்சேரி, ஏப். 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச குழு உறுப்பினர் எம்.கலியமூர்த்தியின் தாயார் ரத்தினம் மாள் (78) வியாழனன்று காலமானார். புதுச்சேரி முதலியார்பேட்டை னைனார் மண்டபத்தில் உள்ள கலியமூர்த்தியின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங் கம், சிஐடியு பிரதேச நிர்வாகி ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராள மானோர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது உடல் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள பெரிய செல்லை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. தாயாரை இழந்துள்ள எம். கலியமூர்த்திக்கு மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச குழு உறுப்பினர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.