districts

சென்னை முக்கிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சங்க அண்ணாநகர் பகுதி பேரவை

சென்னை, ஜூலை 26 - தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் அண்ணா  நகர் பகுதி முதல் பேரவைக் கூட்டம் ராஜன்கோபால் தலைமையில் ஞாயிறன்று (ஜூலை 25) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில துணைச்செயலாளர் பாரதி  அண்ணா, மத்திய சென்னை மாவட்டத் தலைவர் த.சுரேந்திரன்,  செயலாளர் எஸ்.மனோன்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பகுதித் தலைவராக தேவசீலன், செயலாளராக ராஜன், பொருளாளர் கோபால் ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தையல் தொழிலாளர் சங்க  ஆயிரம் விளக்கு பகுதி பேரவை

சென்னை, ஜூலை 26- சென்னை மற்றும் புறநகர் தையல் தொழிலாளர்கள் சங்கம் ஆயிரம் விளக்கு பகுதி ஆண்டு பேரவை ஞாயிறன்று  (ஜூலை 25) புஷ்பா நகரில் நடைபெற்றது. பகுதி தலைவர் என்.ஜி.லோகநாதன் தலைமையில் நடை பெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் எஸ்.டி.ராஜேந்தி ரன், செயலாளர் பி.சுந்தரம், பொருளாளர் எம்.ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைப்பின் பகுதித் தலைவராக முருகன், செயலாள ராக விஜயா, பொருளாளராக லோகநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மெரினாவில் குண்டு வெடிக்கும்: மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

சென்னை, ஜூலை 26- சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்  கிழமை இரவு 8.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணை கூறி அந்த எண்ணில் இருந்து அடிக்கடி ஒருவர் எனது  எண்ணுக்கு பேசுகிறார். மெரினா கடற்கரையில் குண்டு வெடிக்கும் என அவர் கூறி உள்ளார். எனவே அதனை தடுத்து  நிறுத்துங்கள். நான் மெரினாவில் குதிரைக்கு கீழே படுத்து  இருக்கிறேன் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். இதுபற்றி உடனடியாக மெரினா காவல் துறையின ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மெரினா கடற்  கரைக்கு சென்று மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவி யுடன் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அங்கு சுற்றித்திரிந்த  சந்தேக நபர்களை பிடித்தும் விசாரணை நடத்தினர்.

ஆனால்  வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி அங்கு இல்லை. இதையடுத்து மிரட்டல் அழைப்பு வந்த செல்போன் நம்பரை வைத்து காவல் துறையினர் துப்பு துலக்கினர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கோவை யில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையி னர் உடனடியாக கோவைக்கு சென்றனர். கோவை குனிய முத்தூர் பகுதியில் இருந்த அந்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசராணையில் அவரது  பெயர் பீர்முகமது என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை விசா ரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். காவல் துறையினர்  நடத்திய விசாரணையில், மிரட்டல் ஆசாமி பீர் முகமது அடிக்கடி இதுபோன்று தொலைபேசியில் அடிக்கடி வெடி குண்டு மிரட்டல் விடுத்து வருவதும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இதற்கு முன்பு தொடர்ச்சியாக 3 முறை அவர்  போன் செய்து மிரட்டி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து  பீர்முகமதுவின் பின்னணி குறித்து காவல் துறையினர் முழுமை யாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூரில் த.வா.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கடலூர், ஜூலை 26- கடலூர் செந்தாமரைநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (40).  இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் நகர தொழிற்சங்க தலைவராக உள்ளார். இவர் ஞாயி்ற்றுக்கிழமை தனது குடும்  பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். திடீரென நள்ளி ரவு அவரது வீட்டின் முன் பயங்கர சத்தத்துடன் ஏதோ வெடித்து  சிதறியுள்ளது. சத்தம் கேட்டு சுரேஷ் வீட்டில் இருந்தவர்க ளும், அக்கம் பக்கம் உள்ளவர்களும் வெளியே வந்து பார்த்த னர். அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்த தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சுரேஷ் வீட்டின்  முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது. இதுகுறித்து சுரேஷ் கடலூர் புதுநகர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல் துறையினர்  சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் துறை துணை இயக்குனர் சண்முகம் தலை மையில் வந்த தடயவியல் குழுவினர் சுரேஷின் வீட்டின் முன்பு  பதிவாகி இருந்த கைரேகை, தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக புதுநகர் காவல் துறையினர்  வழக்குப் பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்  களை தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு  அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர்களை சுரேஷ்  தட்டி கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரண மாக சுரேசின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது  வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

;