கடலூரில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் சுற்றித்திரிந்த 15-க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து பறிமுதல் செய்தனர்.