districts

சிறுநீர் பாதையில் ஏற்படும் புற்று நோய் அல்லாத கட்டிக்கு மேம்பட்ட சிகிச்சை

சென்னை, ஜூலை 14-

    ஆண்களின் சிறுநீர் பாதையில்  சிறுநீர் வெளியேறாமல் அடைப்பை ஏற்படுத்தும் புற்றுநோய் அல்லாத கட்டிக்கு ‘யூரோலிப்ட்’ என்னும் சிகிச்சை முறையை சென்னையிலுள்ள ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி மருத்துவமனை (AINU)  அறிமுகம் செய்துள்ளது.  

    இது 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்க ளுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சி னையாகும். இது புற்றுநோய் இல்லை என்றபோதிலும், காலப்போக்கில், சிறு நீரின் ஓட்டம் பலவீனமான அறிகுறிகளுடன்,  ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கிறது. சில நேரங்களில், இது  தொற்றை ஏற்படுத்துவதோடு, சிறுநீர்ப்பை களில் கற்கள் மற்றும் சிறுநீரக செயல்பாடு குறைவதற்கும் வழிவகுக்கிறது.  

   இதை மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியாத நிலையில் அறுவை சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதற்கு மாற்றாக தற்போது மேம்பட்ட யூரோலிப்ட் செயல்முறையானது சிறுநீர்க்குழாயைத் தடுக்கும் புரோஸ்டேட் திசுக்களை அழுத்துவதன் மூலம் செயல்படுகிறது, இதன் விளைவாக சிறுநீர் ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது என்று  ஏஐஎன்யூ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் குமார்  கூறி யுள்ளார்.