விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிரான பிரச்சார இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் செப் 1ஆம் தேதி முதல் 6 நாட்கள் நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக வடசென்னை மாவட்டம் திருவொற்றியூரில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.பாக்கியம், பகுதிச் செயலாளர்கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.