districts

img

தீக்கதிர் செய்தியாளருக்கு கேமிரா வாங்க கே.சதாசிவன் ரூ.50 ஆயிரம் நிதியுதவி

சென்னை, செப்.30 – தீக்கதிருக்கு புதிய கேமிரா வாங்க மொழிபெயர்ப்பாளர் கே.சதாசி வன் ரூ.50 ஆயிரம் நிதியாக வழங்கினார். ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து விலகி, அந்த அமைப்பின் கொடூரங்களை விளக்கி சுதீஷ்மின்னி மலையாளத்தில் புத்தகம் எழுதினார். அதனை தமிழில் ‘நரக மாளிகை’ எனும் பெயரில் கே.சதாசிவன் மொழிபெயர்த்தார். இந்த புத்தகம் 3 பதிப்புகளை கண்டுள்ளது. 3வது பதிப்பின் விற்பனையில் கிடைத்த தொகையில் ஒரு லட்சம் ரூபாயை தீக்கதிர் நிருபர் புகைப் படக் கருவி  வாங்குவதற்காக வழங்கினார். இதனிடையே கட்சியின் தென்சென்னை மாவட்ட பேரவைக்கூட்டம். மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரனிடம், தென்சென்னை செய்தியாளருக்கு கேமிரா வாங்க 50 ஆயிரம் ரூபாயும், மாவட்டக்குழுவிற்கு 25  ஆயிரம் ரூபாயும் நன்கொடையாக வழங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்  ஏ.பாக்கியம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ச.அசோகன், எம்.ரெங்கசாமி, தீக்கதிர் சென்னை பதிப்பு பொறுப்பாளர் சி.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;