districts

img

சாதி சான்று இல்லாமல் அவதிப்படும் பூம்பூம் மாட்டுக்கார குழந்தைகள்

ராணிப்பேட்டை,ஜூலை4-  

    சாதிச்சான்று இல்லா மல் அவதிப்படும் பூம்பூம் மாடு வைத்து பிழைப்பு நடத்தும் இந்து ஆதி இனத்தை சேர்ந்த மக்கள் பிள்ளைகளுக்கு பழங்குடியின சான்று வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி பகுதியில் வசிக்கும் பூம்பூம் மாடு வைத்து பிழைப்பு நடத்தும் இந்து ஆதி இனத்தை சேர்ந்த பழங்குடியின மக்க ளின் பிள்ளைகள் முதலாம் தலைமுறை கல்வி பயில் கின்றனர். இந்த மக்களின் பிள்ளைகளுக்கு எஸ்டி சாதிச் சான்று வழங்க கோரி திங்களன்று (ஜூலை 3) திமிரி பேருந்து நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமிரி நகரச் செயலாளர் இரா. நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆற்காடு தாலுகா செய லாளர் எஸ். செல்வம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி. ரகுபதி, விசிக மாவட்டச் செய லாளர்  குண்டா சார்லஸ், மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார், அ. நரேஷ் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.