districts

img

குமரி கடலில் குளிக்க 4ஆவது நாளாக தடை

நாகர்கோவில், மே.8- தமிழ்நாடு கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் மற்றும் கடல் அலைகள் அதிக உயரத்திற்கு எழும்பக் கூடும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. அதைத் தொடர்ந்து 4 ஆவது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று குமரி மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் படகில் செல்ல எந்த தடையும் இல்லை. இதனால் விவேகானந்தர் மண்டபத்திற்கு நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா படகில் ஆர்வமுடன் சுற்றுலா பயணிகள் சென்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் எங்கெல்லாம் கடலில் இறங்கி குளிக்க வாய்ப்புள்ளதோ, அந்த இடங்களில் எல்லாம் கயிறு கட்டப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழும காவலர்களும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.