உலக மனநல தினத்தையொட்டி கடலூரில் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் திங்களன்று (அக். 10) துவக்கி வைத்தார். மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பி.என்.ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எஸ்.மீரா, மாவட்ட மனநல திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.