districts

img

40 ஆண்டுகளாக இருளர் மக்களை ஏமாற்றும் அதிகாரிகள்

கிருஷ்ணகிரி, டிச. 17- சூளகிரி வட்டத்தில் கும்பலம் ஊராட்சி ராமன், தொட்டி,நாகமலை, முனியம்மா பிரிட்ஜ், சின்னகுத்தி, பெரியகுத்தி உட்பட 16 கிராமங்களில் 2500 க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாகியும்  எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராமலும் குடியிருப்புகளுக்கு பட்டாக்கள் வழங்காமலும் இழுத்தடித்து வருகின்றனர். இதேபோல் தமிழக அரசு 1952 ல் கேஆர்பி அணை கட்டுவதற்காக அங்கிருந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களை வீடுகளையும், விவசாய நிலங்களையும் விட்டு  வெளியேற்றினர். மறுகுடி யேற்றமாக இவர்களை கொட்டை யூர், துறிஞ்சிபட்டி,கும்பலம், உத்தனப்பள்ளி, ஏரிஎப்பளம், டேம்எப்பளம்,கோணதிம்மனபள்ளி, கோயில்எப்பளம் உட்பட 16 கிராமங்களில் குடியமர்த்தினர்.     1980 வரை பட்டாக்கள் கொடுக்கா மல் வன நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டு விட்டதாக  மறுத்து வந்தனர்.    எந்த அடிப்படை, சுகாதார  வசதிகளும் இல்லாமல் துப்புகாண பள்ளியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

அரசு நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சூளகிரி வட்டம் ராமச்சந்திரம் பகுதியில் ஓசூர் மாநகராட்சி குப்பைகளை மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் அடிக்கடி எரிப் பதாலும், கடும் துர்நாற்றமும், கிருமிகளால் நோய் தொற்றும், ஆஸ்மா, இருதயக் கோளாறு நோய்கள்  பரவி வருகிறது.  சட்டத்திற்குப் புறம்பாக கணக்கற்ற  கல் குவாரிகள், கிரானைட், கிரசர்கள் இப்பகுதியில் இயங்கி வருகின்றன.  இதனால்காற்று மாசு  ஏற்பட்டு விவசாயிகள் பயிர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.  நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் ஏற்பட்டும்,  நிலத் தடி நீர் கடுமையாக குறைந்தும் வருகிறது..  கடந்த ஐந்து ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் இக் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தன.

இதன் விளைவாக மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், சூளகிரி வட்டாட்சியர்  ஆகியோர்  எழுத்துப் பூர்வமாக மூன்று முறை ஒப்புதல் கடிதம் அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கை எடுத்த பாடில்லை. இந்நிலையில் மக்கள் நலனில் கொஞ்சமும் அக்கறையில்லாத அதிகாரிகள் இழுத்தடிக்கும் போக்கை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வட்ட குழு சார்பில் செயலாளர் எஸ்.முனியப்பா தலைமையில்வெள்ளியன்று  சூளகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.ஜி.சேகர், மாநில குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.     கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் இலவச பட்டாவுக்கு ஆய்வு செய்வ தாகவும் வட்டாட்சியர் உறுதி அளித்துள்ளதாக  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சாம்ராஜ், பிரகாஷ் , வட்ட குழு  உறுப்பினர்கள் சீனிவாசன், முருகே சன், பாலாஜி, எம்.எம்.ராஜூ ஆகி யோர் கூறினர்.