சென்னை,ஜூலை 4-
காய்கறி விலை, மளிகை பொருட்களின் விலை உயர்வோடு வணிக பயன் பாட்டுக்கான மின்சார கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் ஓட்டலில் உணவு விலை உயருகிறது.
மின் கட்டணத்துக்காக 40 விழுக்காடு கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித் துள்ளனர்.
ஓட்டல்களில் பயன் படுத்தப்படும் வணிக சிலிண்டர்களின் விலை 8 ரூபாய் அதிகரித்துள்ளதால் சமையல் செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. 1500 பேருக்கு சமையல் செய்ய 10 சிலிண்டர்கள் தேவைப்படுவதாக ஓட்டல் உரிமையாளர்கள் கூறு கிறார்கள். விலை உயர்வால் ஒரு நாளைக்கு ரூ.80 கூடுதல் செலவாகிறது என்று கூறும் அவர்கள் மாதத்துக்கு ரூ2500 வரை சமையல் செலவு அதி கரித்து இருப்பதால் இது பெரும் சுமை என்றே தெரி வித்துள்ளனர்.
விலை உயர்வு காரண மாக 100 விழுக்காடு அளவுக்கு ஓட்டல் உரிமை யாளர்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் பட்டுள்ளனர். இதனால் ஏற்படும் சுமை ஓட்டல் உரிமையாளரை மட்டுமன்றி பொதுமக்களையும் கண்டிப்பாக பாதிக்கும் என்கின்றனர். இந்நிலை நீடித்தால் ஓட்டல் உணவு வகைகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டா யம் ஏற்படும் என்றார்.